Relationship : இதனால்தான் உறவில் அதிகம் சிந்திக்கக்கூடாது! தெளிவான சிந்தனைக்கு வழிகள்!
எனவே உங்கள் உறவில் அதிகம் சிந்திப்பதை தவிர்ப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களின் சிந்தனைகளை ஏற்காமல் அவற்றின் மீது சவால் விட முடியாது. ஆனால் நமது அதீத சிந்தனை வென்றுவிடாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
விழிப்பு பெறுங்கள்
சில நேரங்களில், அதிகம் சிந்திப்பது நாம் அதிகம் சிந்திக்கிறோம் என உணராமலே கூட நடக்கும். கவனங்களை சிதறவிடாமல் சில மணி நேரங்கள் எடுத்து அதிகம் சிந்திப்பதால் ஏற்படுவதன் விளைவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதிகம் சிந்திப்பது தெரியும்போதும், உங்களின் சிந்தனைகள் அல்லது கவலைகள் உங்களை அந்த வழியில் சிந்திக்க வைக்கிறதா என்று பாருங்கள்.
நம்பிக்கை
அதிகம் சிந்திப்பவர்களுக்கு அவர்களின் பார்ட்னர் மீது நம்பிக்கை வராது. ஏனெனில் அவர்களின் கடந்த காலம் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆனால் கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவமே எதிர்காலத்தில் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் பார்ட்னர் அவர்களை உங்கள் நம்பிக்கைக்கு தகுதியானவராக காட்டினால், அந்த நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.
உங்கள் இணையருடன் உரையாடுங்கள்
உங்களின் அக்கறை மற்றும் அச்சங்கள் குறித்த உங்களின் பயம் குறித்து உங்கள் இணையருடன் பேசுங்கள். நல்ல பார்வையாளராக இருங்கள். அவர்களின் கோணத்தை பாருங்கள். எனவே தெளிவான உரையாடல் மூலம் நீங்கள் உணர்வு ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை உணர்த்த உதவும்.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்
அதிகம் சிந்திப்பது எப்போதும் உண்மையுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் எப்போதும் இல்லை. எனவே உங்கள் மனம் பிறழ துவங்கினால், உங்களை நிதானித்து நிகழ் காலத்துக்கு கொண்டுவருவது அவசியம்.
எழுதுவது
உங்கள் இணையருக்கு எழுதுவது அல்லது பொதுவாகவே எழுதுவது என எதையும் எழுதி வைக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இணையருக்கே நீங்கள் எழுதினால் அதை அனுப்பவோ அல்லது கொடுக்கவோ தேவையில்லை.
நன்றியுணர்வு
உங்கள் உறவில் உள்ள நேர்மறையான விஷயங்களை மட்டும் பாருங்கள். எனவே நீங்கள் நன்றியோடு இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் நன்றாக சென்றவை ஆகியவற்றை பட்டியலிடுங்கள்.
உடற்பயிற்சி
உங்களின் சிந்தனைகளை வெளியேற்றிவிடுங்கள். உங்களின் பயம் மற்றும் அச்சத்தை போக்கும் வழி உடற்பயிற்சியாகும். எனவே உங்கள் மனதை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் முழு கவனமாக இருங்கள்.
சுயகவனிப்பு
தியானம், சரும பராமரிப்பு, உங்களுக்கு பிடித்த பழக்க வழக்கங்களை பழகுவது என உங்களுக்கு பிடித்த விஷயங்கள் எதுவோ அதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு பிடித்த செயலை நீங்கள் செய்யும்போது அது உங்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
உங்கள் அச்சங்களை எதிர்கொள்ளுங்கள்
உங்களின் அச்சங்களை எதிர்கொள்ளும் திறன் உங்களிடம் மட்டுமே உள்ளது. உங்கள் சிந்தனைகள் உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்க அனுமதிக்காதீர்கள். உங்களால் உங்களின் துன்பங்களை அடையாளம் காண முடிந்தால் அவை குறித்து உடனடியாக பரிசீலியுங்கள். உங்கள் மனதின் சிந்திக்கும் திறனை வைத்திருந்திருந்தால், நீங்கள் நம்பிக்கையுடன் தெளிவாக முன்னேறிச்செல்லாம்.