வலுக்கும் கோரிக்கை..! வரும் ஜனவரி 22 பொது விடுமுறை..?
உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
இக்கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் 2.7 ஏக்கர் ஆகும். இதில் 57,400 சதுர அடியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை ராமர் சிலை ஆனது 8 அடி உயரம், 3 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் கொண்டதாகும். மேலும் இந்த ராமர் கோவில் வருகின்ற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 7,000 க்கும் மேற்பட் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. வான அதுல் பட்கல்கர் மகாராஜ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு (Eknath Shinde) கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு பொது விடுமுறை அறிவித்தால் அது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்த வேண்டும். இதனால் அனைவரும் இந்த குடமுழுக்கு விழாவை காண இயலும் என்று அவர் கூறி உள்ளார்.