ஐக்கிய அமீரகத்தில் வெளிநாட்டவர்களும் வேலை செய்ய அனுமதிக்கும் வதிவிட விசா: விரிவான தகவல்

உலகெங்கிலும் உள்ள 200 நாடுகளைச் சேர்ந்த 9.06 மில்லியன் மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இன்னொரு குடியிருப்பாக மாறியுள்ளது.

4 வகையான வதிவிட விசா
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலா பயணியாகவோ அல்லது வேறு வகையிலோ சென்றுவிட்டு, பின்னர் வதிவிட விசா அனுமதி பெற்றவர்கள் 2 முதல் 10 ஆண்டுகள் வரையில் தங்கியிருக்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகம் வெளிநாட்டவர்களுக்கு 4 வகையான வதிவிட விசா வாய்ப்புகளை அளிக்கிறது. வேலைக்கான Green Visa. இந்த விசாவானது 5 ஆண்டுகளுக்கானது. எந்த நிறுவனமோ அல்லது ஐக்கிய அமீரகத்தில் பிறந்த ஒருவரின் பரிந்துறையோ கட்டாயமல்ல.

இந்த விசாவானது முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்களுக்கு என அளிக்கப்படுகிறது. பட்டதாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் எவரும் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும் சுயதொழில் செய்பவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களது ஆண்டு வருவாய் என்பது 360,000 திர்ஹாம் தொகைக்கு குறைவாக இருத்தல் கூடாது.

பல்துறை வல்லுநர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க, மாத சம்பளம் 15,000 திர்ஹாம் தொகைக்கு குறைவாக இருத்தல் கூடாது. அத்துடன் செல்லுபடியாகும் வேலை ஒப்பந்தம் தொடர்பிலான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

Golden Visa
குறைந்தபட்சம் பட்டதாரியாக இருக்க வேண்டும். இந்த விசாவானது காலாவதியான பிறகு அதே காலத்திற்கு புதுப்பிக்கத்தக்கது. இன்னொரு விசா 2 ஆண்டுகள் செல்லுபடியாகும் Standard work visa.

தனியார் துறையில் பணிபுரிகிறார் என்றால், வதிவிட விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். அத்துடன், அரசுத்துறையில் பணிக்கு சேர்ந்த வெளிநாட்டவர்களும் வதிவிட விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

மூன்றாவதாக Golden Visa. இந்த விசாதாரர்கள் 6 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்தாலும், விசா ரத்தாகாது. 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது.

தங்கள் உதவிக்கு எத்தனை பேர்களை வேண்டுமானாலும் பணிக்கு அமர்த்தலாம். மட்டுமின்றி, மனைவி அல்லது துணை மற்றும் பிள்ளைகளை வயது வித்தியாசம் இன்றி தங்களுடன் தங்க அனுமதிக்கலாம்.

மட்டுமின்றி, விசா பொறுப்பாளர் மரணமடைந்தாலும், அந்த விசா காலாவதியாகும் வரையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐக்கிய அமீரகத்தில் வசிக்க முடியும்.

4வது Domestic worker visa. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாளர்கள் விசா பொதுவாக அவர்களின் முதலாளிகளால் ஸ்பான்சர் செய்யப்படுவார்கள். இதனால் ஒரு நிறுவனத்தில் மட்டுமே பணியாற்ற முடியும்.

25,000 திர்ஹாம் சம்பளம் பெறும் ஒருவரால் மட்டுமே பணியளர் விசாவுக்கு ஸ்பான்சர் செய்ய முடியும். ஸ்பான்சர் செய்பவர் கண்டிப்பாக பணியாளருக்கு உறவினராக இருத்தல் கூடாது.

பணியாளர் தனிப்பட்ட வாகன சாரதியாக இருந்தால், ஸ்பான்சர் செய்பவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வாகனங்கள் இருக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *