நெகிழ்ச்சி.. முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்.. அப்படியே எமோஷனல் ஆகி.. கண்கள் கலங்கிய டிஆர்பி!
சென்னை: சென்னையில் நடக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில் மிகவும் உருக்கமாக காணப்பட்டார்.
சென்னை முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி பேசுகையில் அவர் சட்டென எமோஷன் ஆனார். சட்டென அவரின் பேச்சு மாறி லேசாக கண்கள் கலங்கியது. இந்த மாநாடு உருவாக்க போகும் மிக அதிக அளவிலான வேலைவாய்ப்பு குறித்து பேசும் போது சட்டென அவரின் கண்கள் கலங்கியது.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடங்கும் முன் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, இந்தியாவில் உழைக்கும் மகளிரில் 43% தமிழ்நாட்டில் உள்ளனர்.
உலக முதலீட்டாளர் மாநாடு இந்தியா காணாத அறிவுத் திருவிழாவாக இருக்கும்; ஆட்டோமொபைல், டயர் உற்பத்தியில் முன்னணியில் தமிழ்நாடு; இந்தியாவின் 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு; நடப்பு நிதியாண்டில் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி; சுகாதாரம் மற்றும் கல்வித்துறையிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. த மிழ்நாட்டில் ஆண்டிற்கு 1.5 லட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர்
தமிழ்நாடு அரசு முன்னேற்றக் கொள்கையில் தீவிரமாக உள்ளது. திறமையுள்ள மனிதவளம் தமிழ்நாட்டில் உள்ளது தரமணியில் இருக்கும் ஐ.டி பார்க் போல வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் உருவாக்க போகும் வேலைவாய்ப்புகள் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகின்றன என்று அவர் கூறினார்.
முதலீடுகள்: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும்.
இன்று பல முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க ₹6,180 கோடி கான புரிந்துணர்வு ஒப்பந்தம்