மரியாதையை கேட்டு வாங்க கூடாது சார்.. கேப்டனுக்குரிய தகுதிகள் என்ன? பட்டியல் போட்ட தல தோனி!
எப்போதும் யாரிடமும் அதிகாரத்தின் மூலம் மரியாதை பெற்றிட முடியாது என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், பெங்களூர் அணிக்கு எதிரான ஒரு போட்டி மழை காரணமாக வெறும் 6 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாறியது. எனது ஸ்டைலுக்கு அப்படியான ஆட்டங்கள் ஒத்து வராது என்று எனக்கும் நன்றாக தெரியும். அதனால் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டேன் என்று நினைத்தேன்.
ஆனால் தோனி அப்போது, இந்தவொரு போட்டியை மட்டும் வைத்து என்னால் முடிவெடுக்க முடியாது. எனக்கு பத்ரிநாத் தொடர் முழுக்க தேவைப்படுவார். அதனால் இந்த போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் பயிற்சியாளர் பிளம்மிங்கிடம் கூறியது என் காதில் விழுந்த போது, இந்த மனிதனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியதாக கூறுவார்.
கங்குலிக்கு பின் இந்திய வீரர்கள் மத்தியில் அதிகம் மதிக்கக் கூடிய ஒரே கேப்டன் தோனி தான். பேட்டிங்கிற்காக தோனி கொண்டாடப்படுவதை கடந்து, கேப்டன்சிக்காக அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை பண்புகள் குறித்து தோனி பேசியுள்ளார். அதில், விஸ்வாசத்திற்கும், மரியாதைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்.
ஒரு அணியின் ஓய்வறையை எடுத்து கொண்டால் பயிற்சியாளர்கள் குழு, வீரர்கள் அனைவரும் கேப்டனுக்கு மரியாதை அளிப்பார்கள். அதற்கு நாம் என்ன பேசிகிறோம் என்பதைவிடவும், என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். சில நேரங்களில் நாம் பேசாமல் இருந்தால் கூட, செயல்பாடுகள் மூலம் மரியாதை கிடைக்கும்.
ஒரு பதவிக்கோ அல்லது ஒரு பொறுப்புக்கோ வரும் போது மரியாதை கிடைத்துவிடாது. எப்போதும் ஒரு தலைவன் மரியாதையை சம்பாதிக்க வேண்டும். அது நம் செயல்பாடுகள் மூலம் மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் தனித்திருக்கிறோமோ என்று மனதில் அச்சங்கள் எழும். சில நேரங்களில் நமது அணி நம் மீது மற்றவர்கள் நம்பிக்கை வைத்தாலும், நம் மீது நமக்கு நம்பிக்கையே வராது.
எப்போது மரியாதையை அதிகாரத்தின் மூலம் பெற முடியாது. அது தானாகவே வர வேண்டும். அப்படியான ஒன்றை விதைத்துவிட்டால், வீரர்களின் செயல்பாடுகளும் நிச்சயம் அதிகரிக்கும். அதற்கான முதல்படி தான் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் வலிமையையும், பிரச்சனையையும் அறிந்து கொள்ள வேண்டும். சில வீரர்களுக்கு பிரஷர் மிகவும் பிடிக்கும். சிலருக்கு பிரஷரே பிடிக்காது. அதற்காக தான் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வது அவசியம்.
அதனை புரிந்து கொண்ட பின், அவரின் பிரச்சனையை பற்றி அந்த வீரரிடம் கூறாமலேயே அதனை நாம் சரி செய்ய தொடங்கிவிடுவோம். அப்படி செய்யும் போது ஒவ்வொரு வீரரும் மனதளவில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதேபோல் சொந்த தேவையில்லாத யோசனைகளும் இருக்காது. சில விஷயங்கள் சரியாக நடக்கும் எப்படி என்பதை பார்க்க வீரர்கள் விரும்புவார்கள்.
அதுதான் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பணி. யாருக்கு என்ன வரும், எப்படி செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அப்படியான நேரங்களில் திட்டங்களை எளியாக வைத்து வேண்டும். எப்போதும் நான் தலைமை தாங்கிய அணிகளுக்கு பிரத்யேக குணமிருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி குணங்கள் உண்டு என்று தெரிவித்துள்ளார்.