மழைக்கு ரெஸ்ட்… பனி மூட்டம் நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழைக் காலம் வரும் 15-ஆம் தேதியுடன் நிறைவடைய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுச்சேரியிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.