25 முறை ரீ டேக்.. பலமுறை அடித்தார்.. 50 வயது நடிகைக்கு நேர்ந்த கொடுமை!
சென்னை: மலையாள நடிகையான ஸ்வீதா மேனன் தமிழில், சிநேகிதியே, சாதுமிரண்டால், நான் அவனில்லை பாகம் 2, இணையதளம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் தனக்கு படப்பிடிப்பின் போது நேர்ந்த அந்த மோசமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
மாடல் அழகியான நடிகை ஸ்வீதா மேனன், மம்முட்டி நடித்து 1990ம் ஆண்டு வெளியான மலையாள படமான அனஸ்வரம் என்றபடத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டிற்கு சென்ற இவருக்கு இஷ்க் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
30க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர், அமீர் கான் மற்றும் அஜய் தேவ்கன் நடித்த ஹம்கோ தும்சே ப்யார் ஹை மற்றும் பந்தன் போன்ற படங்களில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும், இவர், மலையாள சினிமாவில் பலேரி மாணிக்யம், சால்ட் என் பெப்பர் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றார்.
தமிழ் படங்களில்: படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், சிநேகிதியே என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சாதுமிரண்டால் படத்திலும் நான் அவனில்லை இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் இணையதளம் என்ற படத்தில் நடித்தார் அதன் பிறகு இவர் தமிழ் பக்கம் தலைகாட்டாமல் மலையாளப்படத்தில் வரிசையாக படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.