பதவி விலகிய ஹங்கேரிய நாட்டு ஜனாதிபதி
ஹங்கேரி ஜனாதிபதி கேட்லின் நோவக் பதவி விலகியதை அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுவர்களை தவறான முறைக்கு உட்படுத்திய வழக்கை மூடிமறைத்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதற்கான தனது முடிவை எதிர்த்து அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
கடந்த வாரம், அனாதை இல்ல இயக்குனருக்கு எதிரான சிறுவர்களை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு குழந்தைகளை கட்டாயப்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நபருக்கு ஜனாதிபதி கேட்லின் நோவக் மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அதற்கு எதிராக ஹங்கேரியில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபருக்கு மன்னிப்பு வழங்கியதில் தவறிழைத்து விட்டதாக ஹங்கேரி ஜனாதிபதி கேட்டலின் நோவக் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.