29 வயதில் ரிட்டயர்ட்மென்ட்.. கூகுள் ஊழியரின் முடிவு தான் இன்றைய தலைமுறையினரின் டிரெண்டு!
இன்றைய இளைஞர்களின் மனோபாவத்தில் பல்வேறு புரியமுடியாத மாற்றங்களைக் காண முடிகிறது. நல்ல படிப்பு, கை நிறைய காசு, சீக்கிரமே ரிட்டயர்ட்மென்ட் இதுதான் இப்போதைய வாழ்க்கை முறையாகிவிட்டது.மும்பையைச் சேர்ந்தவர் டேனியல் ஜார்ஜ்.
தனது 24 ஆவது வயதில் கூகுள் நிறுவனத்தில் அமெரிக்காவில் வேலைக்குச் சேர்ந்தார்.
4 ஆண்டுகள் வேலை பார்த்தார். ஆண்டுக்கு ரூ.60 லட்சத்துக்கு மேல் மிச்சம் பிடித்தார். அவ்வளவுதான் சாமான் சட்டுகளை மூட்டைக் கட்டிக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். கையில் இருக்கும் காசை வைத்து மிச்ச மீத வாழ்க்கையை ஹாப்பியாகக் கழிக்க முடிவு செய்து விட்டார். மேற்கொண்டு மாத சமபளத்துக்கு வேலைபார்த்து சம்பாதிக்கும் எண்ணம் எல்லாம் டேனியல் ஜார்ஜூக்கு இல்லை. இனி ரிட்டயர்டுமென்ட் வாழ்க்கை தான்.டேனியல் ஜார்ஜ்ஜை சொல்லித் தப்பில்லை. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது. இதற்குக் காரணம் இவர்களது இளம்வயதிலேயே வேலையில் சந்தித்த அதிக மன உளைச்சல்கள் தான் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.இது பற்றி டேனியல் ஜார்ஜ் கூறுகையில், கூகுளில் நான் வேலை பார்த்தபோது எனது வருமானத்தில் 10 சதவீதத்தை மட்டுமே செலவு செய்வேன்.
இப்போது எனக்கு சம்பளம் வேண்டும் என்ற அவசியம் இல்லை.சிறிய கணக்கைப் போட்டுபார்த்த போதுதான் எனக்கு தெரிந்தது, அடுத்த சில ஆண்டுகள் சேமிப்பு செய்தால் நான் இந்தியாவுக்குத் திரும்பி வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று. எனக்கென்று சுயமாக ஒரு கம்பெனியை தொடங்க முடியும் என்றார். டேனியல் ஜார்ஜ் ஆண்டு தோறும் ரூ.62 லட்சத்தை தனது வருமான வரி பிடித்தம் இல்லாத கணக்கில் சேமித்து வந்துள்ளார்.ஐஐடி பாம்பேயில் படித்தவரான டேனியல் ஜார்ஜுக்கு 24 வயதிருக்கும் போது வேலையில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தோன்றியது. அமெரிக்காவில் இன்டர்ன்ஷிப் முடிந்தவுடன் கூகுளில் அப்போதுதான் அவருக்கு வேலை கிடைத்தது.
அவரது சம்பள பேக்கேஜ் 265,000 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ஆண்டுக்கு ரூ.2.22 கோடி ஆகும்.இஞ்சினியரிங் பிஸிக்ஸில் பிஇ பட்டத்தை ஐஐடி பாம்பேயில் 2015 ஆம் ஆண்டில் டேனியல் ஜார்ஜ் முடித்தார்.தற்போது அவருக்கு வயது 29. இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் நிபுணரிடம் இனி எப்போதும் சம்பளம் வேண்டும் என்ற கவலை இல்லாத அளவுக்கு பணம் கையிருப்பில் உள்ளது. இவ்வளவு பணத்தை அவர் எப்படி சேமித்தார் என்பது பற்றி டேனியல் ஜார்ஜ் கூறுகையில் 2018 ஆம் ஆண்டில் கூகுளில் வேலைபார்த்தபோது இது ஆரம்பித்தது என்றார்.