அரசியலில் இருந்து விலகுகிறேன்: பாஜக எம்.பி. கௌதம் கம்பீர்..!
2019ல் பாஜகவில் இணைந்த இவர், மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், திடீர் திருப்பமாக தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கௌதம் கம்பீர் திடீர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி தன்னுடைய வருங்கால கிரிக்கெட் பணிகள் காரணமாக அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட கம்பீர் விரும்பியதாகவும் ஆனால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்று தெரிந்ததால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்குவங்க மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஐபிஎல் தொடரின் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி செயல்பட்டு வருகிறது. நடிகர் ஷாருக்கானுக்குச் சொந்தமான இந்த அணியின் ஆலோசகராக கம்பீர் இருந்து வருகிறார். இந்நிலையில், மம்தாவிற்கு ஆதரவாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் செய்திகள் கசிகின்றன.