நெய் மணக்கும் வரகு அரிசி சர்க்கரை பொங்கல்: செம்ம சுவையா இருக்கும்
வரகு அரிசியில் இப்படி சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
¼ கப் நெய்
4 டேபிள் ஸ்பூன் முந்திரி
2 ஸ்பூன் திராட்ச்சை
2 ஸ்பூன் பாசி பருப்பு
வரகு அரிசி – 1 கப்
2 கப் தண்ணீர்
¾ கப் வெல்லம்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி, திராட்ச்சைகளை வறுத்து கொள்ளவும். தொடர்ந்து குக்கரில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பாசி பருப்பு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து வறுக்க வேண்டும். தொடர்ந்து வரகு அரிசி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெல்லத்தை சேர்த்து கொள்ளவும். 4 விசில் விட வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து இதை, சேர்த்து கிளர வேண்டும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்ச்சையை சேர்த்து கிளரவும்.