நெய் மணக்கும் வரகு அரிசி கேசரி: ஒரு முறை இப்படி செய்யுங்க
தேவையான பொருட்கள்
1 டம்ளர் வரகு அரிசி
முக்கால் டம்ளர் நாட்டு சர்க்கரை
10 முந்திரி
8 திராட்சைகள்
நெய் – அரை கப்
தண்ணீர் 1 ½ கப்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து வரகு அரிசியை வறுத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இதை குக்கரில், தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராச்சைகள் சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து இதை எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளரவும். தண்ணீ சேர்க்கவும் .நன்றாக கரைந்ததும், வரகு வேகவைத்ததை சேர்க்கவும். நன்றாக கிளரவும். நெய் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து வறுத்த முந்திரி, திராட்ச்சை சேர்த்து கொள்ளவும்.