தோல், முடி பிரச்சனைகளுக்கு அரிசி நீர்: நிபுணர்கள் பதில்
அரிசி தண்ணீர் சருமத்துக்கு செய்யும் அற்புதமான நன்மைகளை பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அரிசி தண்ணீர் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், உங்கள் அழகு பராமரிப்பு வழக்கத்துக்கு அரிசியை வேகவைக்கத் தொடங்கும் முன், இந்த பிரபலமான தீர்வுக்கு பின்னால் உள்ள உண்மைகளை ஆராய்வோம்.
அரிசி நீர் என்றால் என்ன?
அரிசியை ஊற வைத்தோ அல்லது புளிக்க வைப்பதிலிருந்தோ பெறப்பட்ட அரிசி தண்ணீர் என்பது தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்த ஒரு பழமையான அழகு ரகசியம். வரலாற்று ரீதியாக, ஆசியாவில், குறிப்பாக ஜப்பான் மற்றும் சீனாவில் உள்ள பெண்கள், தங்கள் தோல் மற்றும் முடியை மேம்படுத்த பல நூற்றாண்டுகளாக அரிசி நீரைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த நீரை உடனடியாகப் பயன்படுத்தலாம் அல்லது சில நாட்களுக்கு புளிக்க வைத்து கூடுதல் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டலாம். இது முடி மற்றும் தோலுக்கு அதன் நன்மைகளை அதிகரிக்கும்.