இயற்கை மருத்துவ குணங்கள் நிறைந்த ”கருணைக்கிழங்கு”! சாப்பிடுவதால் என்ன பயன்?
* கருணைக்கிழங்கில் பொதுவாக மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கை, கால் வலி போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக உள்ளது.
* கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும். ரத்தத்தை சமப்படுத்தவும் சர்க்கரை நோயை குணப்படுத்தவும் உதவுகிறது.
* இதில் புரதம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் கல்லீரலுக்கு பலம் கொடுக்கும். ரத்த அழுத்தம், மாரடைப்பு, கேன்சர் போன்றவை வராமல் தடுக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. கருணைக்கிழங்கு மூலம் அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், அல்சர் போன்றவை வராமல் இருக்கும்.