ரைட்டு.. விஜயகாந்த்துக்கு இரங்கல் தெரிவித்து மோடி சொன்ன அந்த வார்த்தை.. கவனிச்சீங்களா
திருச்சி வந்த பிரதமர் மோடி இன்று மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.
திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், 2024-ம் ஆண்டின் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்கம்.. எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.
விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.
தமிழ் மொழி: தமிழ்நாட்டுக்கு வரும்போது புதிய சக்தி கிடைக்கிறது உலகில் எங்கே பேசினாலும் தமிழ்நாட்டை, தமிழ் மொழி பெருமையை பேசுகிறேன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தினோம்.
தமிழ் மொழி கலாசாரம், மொழி தொடர்பான உற்சாகம் அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப் பெரிய முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது.
மேக் இன் இந்தியாவின் அடையாளமாக தமிழ்நாடு மாறுகிறது. மாநில வளர்ச்சி மூலம் தேச வளர்ச்சி என்பதே நமது அடிப்படை. 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டில் 400 முறை பயணம். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தால் 3 மடங்கு வளர்ச்சி. நாடு விடுதலைக்கு பின் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தோம். மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வசதி அளித்துள்ளோம். மீனவர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகிறோம்.
விஜயகாந்த்: தமிழ் மொழியை புகழாமல் என்னால் ஒருபோதும் இருக்க முடியாது. தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன். எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன்.
விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் இரங்கல் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான் அனைத்தையும் விட தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த் .விஜயகாந்த் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன.
அரசியலில் தேசிய நலனையே எல்லாவற்றையும் விட அதிகமாக முன்னிறுத்தினார் விஜயகாந்த் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
விஜயகாந்த் குறி: விஜயகாந்த் பற்றி பிரதமர் சொல்லவருவது தேமுதிக ஓட்டு வங்கிக்கு பாஜக குறி வைத்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தேமுதிக என்பதே தேசிய திராவிட முற்போக்கு திராவிட கழகம் தான். கட்சியிலேயே தேசிய உள்ள நிலையில்தான்.. விஜயகாந்த் தேசியம் பற்றி அதிகம் யோசித்ததாக மோடி குறிப்பிட்டு உள்ளார்.
விஜயகாந்த் இல்லாத நிலையில் அந்த கட்சிக்கு இருக்கும் 2% வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட வாக்குகளை பாஜக பக்கம் திருப்பும் விதமாக மோடி இப்படி பேசி உள்ளாரோ என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
மோடி வரவில்லை: முன்னதாக கடந்த வாரம் காலமான விஜயகாந்த் மரணத்திற்கு பிரதமர் மோடி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருமணம் மோடி வருகைக்கு காத்திருந்த காரணத்தால்.. இன்னும் நடக்காமல் நிச்சயதார்த்தோடு அப்படியே நின்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.