ரிங்கு சிங் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் காலம் நெருங்குகிறதா?.. அவசியம் என்ன?
இதற்குப் பிறகு கடந்த ஆண்டில் அயர்லாந்துக்கு எதிராக t20 தொடரில் அறிமுகமான ரிங்கு சிங், இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகம் ஆகிவிட்டார். இன்னும் அவருக்கு எஞ்சி இருப்பது இந்திய டெஸ்ட் அணிக்கான வாய்ப்பு மட்டுமே.
ரிங்கு சிங்கை மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டும் விஷயம் என்னவென்றால், அவர் ஆட்டத்தின் சூழ்நிலையை மிக நன்றாக உணர்ந்து கொள்கிறார். உடனுக்குடன் அதற்கேற்றபடி தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்கிறார். எந்த இடத்திலும் அழுத்தத்தை வெளிக்காட்டாத அமைதியாக இயல்பாக இருக்கிறார். விக்கெட்டை விட்டுத்தராமல் அதே சமயத்தில் ரன்கள் எடுக்கும் கலை அவருக்கு தெரிந்திருக்கிறது. இதுதான் அவரை தனித்துக் காட்டுகிறது.
ரிங்கு சிங் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டிய காலம் மற்றும் அவசியம் வந்துவிட்டதா? என்றால், அவர் ஒரு இடது கை வீரராக இருக்கிறார் என்பதோடு, சூழ்நிலைக்கும் தேவைக்கும் தகுந்தபடி தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவர் என்பதாலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வேண்டிய காலம் வந்து விட்டதாகவே கூறலாம்.
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடதுகை வீரர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் வந்ததும், அதுவரை அச்சுறுத்தலாக தெரிந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சு சாதாரணமாகத் தெரிந்தது. அவர் வேகமாக ரன்கள் எடுத்தார். இதை அப்போதே தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார். எனவே இதற்காகவே திறமையான ஒரு இடது கை வீரர் நடு வரிசையில் தேவைப்படுகிறார்.
மேலும் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கொண்டு வந்த பிறகு மாறி இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து அதிரடியாக இங்கிலாந்து விளையாடுகிறது, ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரையும் வைத்து நடுவில் அதிரடியாக விளையாடுகிறது.