திண்டுக்கல்லில் பழமையான அந்தோணியார் ஆலய ஜல்லிக்கட்டு விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மதுரைக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் தேவாலயங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் அமைந்துள்ள நூறு ஆண்டுகள் பழமையான புனித பெரிய அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 430 மாடு பிடிவீர்களும் பங்கேற்றுள்ளனர்.

மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட சுற்றும் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்கின்றன. சீறி வரும் காளைகளை அடக்கும் வீரர்கள் 25 பேர் கொண்ட குழுவாக பிரித்து மொத்தம் 18 குழுக்களாக போட்டியில் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

கிராம மக்கள் ஒன்று கூடி நடத்தும் இந்த போட்டியில் எவரது பிடியிலும் சிக்காமல் செல்லும் காளைகளுக்கும், காளைகளின் திமிலை பிடித்து அடக்கும் வீரர்களுக்கும் கட்டில், அண்டா, டிவி, கடிகாரம், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *