ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணிக்கு திரும்பிய ரோஹித், கோலி; டி20 உலகக் கோப்பை கேப்டன் யார்?
ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் காயமடைந்ததால், டி20 போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை தொடங்கும் தொடருக்கான முழு பலம் கொண்ட அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்தனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியாவுக்காக கடைசியாக டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய பிறகு, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளனர். இதனால், ஜூன் மாதம் அடுத்த டி20 உலகக் கோப்பை விளையாடுவதற்கான வாய்ப்புகளை பிரகாசமாகி உள்ளது. ரோஹித் மற்றும் விராட் கடைசியாக நவம்பர் 2022-ல் டி20 போட்டிகளில் விளையாடினர். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது இந்தியா அரையிறுதியில் தோல்வி அடைந்த போட்டியே அவர்கள் விளையாடிய கடைசி டி20 போட்டியாக இருந்தது.
மூத்த பேட்ஸ்மேன்கள் இருவரும் தேர்வாளர்களிடம் தங்களின் இருப்பு குறித்து தெரிவித்ததாக கடந்த வாரம் இந்த செய்தி தெரிவித்திருந்தது. ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். ஆனால், ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்ததால் தேர்வாளர்கள் ரோஹித் ஷர்மாவைத் தேர்வு செய்தனர்.
இருப்பினும், காயத்தால் பாதிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதி அடைந்தவுடன் ரோஹித் ஷர்மா தொடர்ந்து அணியில் முன்னிலை வகிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டி20 தரவரிசையில் நம்பர்.1 இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக விலகியுள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தேர்வு செய்யப்படவில்லை.