Rohit Sharma: ஆண்டர்சன் வேகத்தில் ஸ்டெம்பை பறி கொடுத்த ரோகித் சர்மா, 3ஆவது நாளில் இந்தியா தடுமாற்றம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தார். பின்னர், 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி மட்டும் அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா வேகத்தில் கிளீன் போல்டானர். இதன் மூலமாக 13 ஆவது முறையாக பும்ரா வேகத்தில் ஆட்டமிழந்துள்ளார். இறுதியாக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதைத் தொடர்ந்து, 143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வ் ஜெய்ஸ்வால் இருவரும் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கினர். இதில், ரோகித் சர்மா 13 ரன்னுடனும், ஜெய்ஸ்வால் 15 ரன்னுடனும் 2ஆவது நாளை முடித்தனர். அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்திந்தது.

இதையடுத்து இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் 8 பந்துகள் மட்டுமே கூடுதலாக பிடித்து ஆண்டர்சன் வேகத்தில் கிளீன் போல்டானார். இதே போன்று, ஜெய்ஸ்வால் 10 பந்துகளில் கூடுதலாக 2 ரன்கள் எடுத்து 17 ரன்னுக்கு ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில்லிற்கு 2 முறை எல்பிடபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது. இதில் ஒரு முறை பந்து பேட்டில் பட்டது. 2ஆவது முறை நடுவர் முடிவு என்பதால் அவுட்டிலிருந்து தப்பித்துள்ளார்.

தற்போது வரையில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது முதல் டெஸ்ட் போன்று தான் இந்தப் போட்டியின் முடிவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *