ரோகித் சர்மா வீரர்களை திட்டுவார்.. ரோகித்தை கேட்காமல் மும்பை அணி எதுவும் செய்யாது – பிரவீன் குமார்

விராட் கோலி கேப்டன் பகுதியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியை ரோகித் சர்மா சிறப்பாக வழி நடத்தி வருகிறார். 2022 டி20 உலக கோப்பையில் அரை இறுதி வரை சென்ற இந்திய அணி 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியது.

இது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணியால் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட ரோகித் தலைமையிலும் வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த கேப்டனாக இருக்கிறார். ஒரு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். இந்திய அணியை கட்டமைத்ததில் மிகப்பெரிய பங்கு கங்குலியை சேரும். அவர்தான் இளம் வீரர்களையும் அனுபவ வீரர்களையும் கலந்து ஒரு அணியை தயார் செய்தார்.

ரோகித் சர்மாவை பொறுத்தவரை நண்பர்களின் நண்பர்களாக விளங்குகிறார். அவர் வீரர்கள் ஏதேனும் தவறு செய்தால் உடனடியாக திட்டி விடுவார். அதேபோல் கட்டி அணைத்து உற்சாகமும் கொடுப்பார். அணியை நல்ல வழியில் வழி நடத்தும் ரோகித் சர்மா அணிக்கு சுதந்திரத்தை கொடுக்கிறார்.

ஐபிஎல் தொடரில் தற்போது ரோகித் சர்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்றாகவே தெரியும். களத்திற்கு சென்று பேட்டிங்கில் சுதந்திரமாக ரோகித் சர்மா விளையாட போகிறார். கேப்டன்சியால் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பாதிக்கப்படும் என்று நான் நம்பவில்லை. ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. அவர் எப்போதும் போல் தான் நன்றாக விளையாடுவார்.

அவர் ஒரு அனுபவ சாலி கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கப்பட்டது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக தன்னிச்சையாக முடிவெடுத்து இருக்காது. இந்த முடிவு குறித்து ரோகித் சர்மாவிடம் ஆலோசனை செய்த பிறகு தான் அவர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருப்பார்கள். ரோகித் சர்மாவிடம் பேசாமல் மும்பை அணியால் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியாது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *