அஸ்வினை சரியாக பயன்படுத்தாத ரோஹித்.. ஆனால் கேப்டன் பும்ரா செய்த மேஜிக்.. என்ன நடந்தது?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினை கேப்டன் ரோஹித் சர்மா சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் அமைந்தது.
முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் சில இன்னிங்க்ஸ்களில் அஸ்வினுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னாள் வீரர்கள் முன் வைத்தனர். மேலும், சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பிட்ச்களில் அஸ்வினுக்கு துவக்கம் முதலே பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை என்ற புகாரும் முன் வைக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா மீது இந்த விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது டெஸ்ட்டில் ஒரு மாற்றம் நடந்தது.
ஐந்தாவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அப்போது முதுகு வலி இருந்ததால் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டார். இந்தியா அதிக முன்னிலை பெற்று இருந்ததால் துணை கேப்டன் பும்ரா அணியை வழிநடத்தினார்.
பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரில் இருந்தே அஸ்வினுக்கு ஓவர் கொடுத்தார். அதுவும் தொடர்ந்து 8 ஓவர்களை அஸ்வினை வீசச் செய்தார். அதன் பலனாக அவர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் சிறிய ஓய்வுக்கு பின் மீண்டும் அஸ்வினுக்கு ஓவர் கொடுத்தார் பும்ரா. அப்போது அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
தனது நூறாவது டெஸ்ட்டில் ஆடிய அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் மொத்தம் 5 விக்கெட்கள் வீழ்த்தி 36வது 5 விக்கெட் ஹால் சாதனை படைத்தார். இதன் மோளம் ரோஹித் சர்மாவை விட பும்ரா கேப்டனாக அஸ்வினை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என விமர்சகர்கள் கூறினர். இரண்டாவது டெஸ்ட்டில் அஸ்வின் மொத்தம் 9 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.