சாண்டா கிளாஸ் ஆன நடிகை ரோஜா.. குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை ஒட்டி, ஸ்கூட்டரில் ஊர்வலமாக சென்றும் , சாண்டா கிளாஸ் வேடம் அணிந்தும் சென்ற நடிகையும் அமைச்சருமான ரோஜா, குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் 51-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜயவாடாவில் நடிகை ரோஜா ஸ்கூட்டரில் ஊர்வலம் சென்றார்.
பின்னர் பாம்பே காலனி பகுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்ற ரோஜா, போலியோவால் பாதிக்கப்பட்ட காலணிகள் தைக்கும் தொழிலாளியின் வீட்டிற்குச் சென்று பரிசுகள் வழங்கினார்.
தொடர்ந்து குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். தொழிலாளியின் மனைவியின் மருத்துவ செலவுக்காக 2 லட்சம் ரூபாயையும் அமைச்சர் ரோஜா நன்கொடையாக வழங்கினார்.