Rose Lassi Recipe : உடல்நலன் காக்கும் ரோஸ் லஸ்ஸியை வீட்டிலேயே தயாரிக்கலாம்

ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகள் குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் சரியாக தூங்க முடியாது, மூளையின் செயல்பாடு குறையும் மற்றும் உடல் சோர்வடைய தொடங்கிவிடும். எனவே நாம் சாப்பிடும் உணவு குடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகளை தீமைகள் பற்றி முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டும்.

குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகளில் தயிருக்கு முதலிடம் அளிக்கலாம். வெயிறும் வயிற்றில் தினமும் 100 கிராம் தயிர் சாப்பிடுவது குடலுக்கு மிகவும் நல்லது. வெறும் தயிரை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் லஸ்ஸி செய்து சாப்பிடுங்கள். லஸ்ஸி செய்வதற்கு தரமான தயிர் தேவை. முதலில் தரமான தயிர் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

ரோஸ் லஸ்ஸி செய்யத் தேவையானவை

  • கெட்டியான தயிர்
  • பால்
  • மண் பானை
  • சர்க்கரை
  • பால் பவுடர்
  • தயிர் பாக்கெட் அல்லது உறை ஊத்தின பால்
  • ரோஸ் சிரப்
  • பாதாம்
  • பிஸ்தா

கவனம் கொள்க

லஸ்ஸி தயாரிக்கும் முறை மிகவும் எளிதானதே. ஆனால் தரமான தயிர் தயாரிக்க உங்களுக்கு ஐந்து மணி நேரம் வரை ஆகலாம். தயிர் தயாரிக்க நீங்கள் எந்த பாலை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ரோஸ் லஸ்ஸி செய்முறை

  • முதலில் அரை லிட்டர் பாலை நன்கு கொதிக்க விடவும். பால் கொதித்த பிறகு அடுப்பை ஆஃய் செய்து விட்டு இரண்டு மணி நேரத்திற்கு காத்திருங்கள்.
  • உள்அறை வெப்பத்திலேயே பால் இரண்டு மணி நேரம் இருந்த பிறகு அதை தொட்டு பாருங்கள். பாலின் சூடு வெதுவெதுப்பாக இருக்க வேண்டும்
  • நீங்கள் தயிர் தயாரிக்க அதிக கொழுப்பு கொண்ட பாலை பயன்படுத்தலாம். ஏனெனில் அது உங்கள் வேலையை மேலும் சுலபமாக்கிடும். எருமை பால் பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு
  • லஸ்ஸி செய்தவற்கு தயிர் ஐஸ் கிரீம் போல மிகவும் கெட்டியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். தயிர் கெட்டியாக இல்லாமல் தண்ணீர் போல இருந்தால் லஸ்ஸி தயாரிக்க இயலாது
  • இதன் பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு அதாவது 30 கிராம் பால் படவுரை கொதிக்க வைத்த பாலில் சேர்க்கவும்
  • இதைத் தொடர்ந்து விஸ்க் பயன்படுத்தி பாலையும் பால் பவுடரையும் நன்றாக அடிக்க வேண்டும்
  • பால் பவுடர் பாலில் நன்றாக மிஸ்க் ஆக வேண்டும்
  • தற்போது ஒரு பெரிய வடிகட்டியை பயன்படுத்தி பால் பவுடர் கலந்த பாலை வடிகட்டவும்
  • இதில் கரையாத பால் கட்டிகள் எதுவும் இருந்தால் வடிகட்டியில் சிக்கி விடும்
  • வீட்டில் ஏற்கெனவே உறை ஊத்திய தயிர் இருந்தால் அதை பயன்படுத்தலாம் அல்லது பாக்கெட் தயிர் வாங்கி பாலுடன் சேர்த்தால் ஐஸ் கீரிம் போல தயிர் இருக்கும்
  • பாலை தயிர் ஆக்குவதற்கு 30 மில்லி தயிர் சேர்த்து உறை ஊற்றவும் நன்றாக மிக்ஸ் செய்யவும்
  • இதன் பிறகு நாம் செய்யப் போகும் காரியம் தான் தயிர் தயாரிப்பதற்கு மிகவும் முக்கியமானது
  • நாம் உணவங்களில் சாப்பிடும் போது தயிர் மிகவும் கெட்டியாக இருப்பதை பார்த்திருப்போம். அவற்றின் சுவை சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.
  • அதே போல தயிர் தயாரிக்க மண் பானை அவசியம். நீங்கள் இதற்கு சின்னச் சின்ன மண் பானைகள் பயன்படுத்தலாம் அல்லது மண்பாண்டப் பொருட்களை பயன்படுத்தலாம்
  • உறை ஊற்றிய பாலை சின்னச் சின்ன மண் பானைகளில் ஊற்றி அடுப்பின் அருகேயே வைக்கவும். அவற்றின் மேல் துணி அல்லது மூடி போட்டு விடுங்கள்
  • நான்கு மணி நேரத்தில் பால் தயிராக மாறி நன்றாக கெட்டியாகிவிடும்.
  • இப்போது ரோஸ் லஸ்ஸிக்கு தேவையான தரமான தயிர் தயார்.
  • மண் பானையின் மேற்பரப்பில் இருக்கும் தயிர் அடுக்கை ஸ்பூன் பயன்படுத்தி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்
  • உங்களிடம் ஒரு லிட்டர் தயிர் இருந்தால் மூன்று 300 மில்லி கிளாஸ் அளவிற்கு லஸ்ஸி தயாரிக்க முடியும்
  • இதையடுத்து மிக்ஸியில் ஒரு லிட்டர் தயிர் ஊற்றி ஏழு டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் rooh afza எனும் ரோஸ் சிரப் சேர்த்து அரைக்கவும்
  • இரண்டு நிமிடங்களுக்கு அரைத்தால் சுவையான ரோஸ் லஸ்ஸி தயார்.
  • இறுதியாகத் தயிர் அடுக்கை ரோஸ் லஸ்ஸின் மேல் போட்டு பாதாம், பிஸ்தா ஆகியவற்றை பொடிதாக நறுக்கி தூவி விடுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *