சுழலும் பூமி… விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அற்புத வீடியோ… இணையத்தில் வைரல்!

பூமி உருண்டையானதா, தட்டையானதா? என்ற நீண்ட நெடிய விவாதங்களுக்கு பிறகு பூமி உருண்டையானது தான் என கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பூமி, தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வரும் என்றும் அவ்வாறு பூமி, சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆகும் என்றும் நாளடைவில் வின்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

பூமி தன்னை தானேசுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வந்தாலும், பூமி சுற்றுவதை நம்மால் உணர முடியாது. ஆனால் பூமி சுற்றுவதை நம்மால் கண்ணால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அரிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்கள் விண்வெளியில் கால் வைத்தது முதலே பல கேள்விகளுக்கு தீர்வு காண தொடங்கிவிட்டனர். நிலாவில் தண்ணீர் இருக்கிறதா? உயிர் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா? என அராய்சியை விரிவுப்படுத்திக்கொண்டே செல்கின்றனர். அந்த வகையில் விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கை கோள்கள் அவ்வப்போது சில அறிய நிகழ்வுகளையும், கோள்களை படம் பிடித்து அனுப்புகின்றன.

அந்த வகையில் பூமி சுழலுவது போன்று விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மெல்ல பூமி சுழலுகிறது, அதனுடன் மரங்களும் செடி, கொடிகளும் சேர்ந்து சுழலுகின்றன. ஆனால் நட்சத்திரங்கள் மட்டும் அசையாமல் அப்படியே இருக்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *