ராயல் என்ஃபீல்டு எல்லாம் ஓரமா போ! கம்மி ரேட்ல செம பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் மோட்டார் சைக்கிளாக மேவரிக் 440 என்ற பிரிமியம் செக்மென்ட் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் மூன்று வேரியன்டுகளாக விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக் ரூபாய் 1.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வர உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் பைக்காக மேவரிக் 440 என்ற பைக்கை அப்பர் பிரிமியம் செக்மெண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குக்கான புக்கிங் இன்று முதல் துவங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த பைக்கின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸிக், மிட், டாப் என மூன்று விதமான வேரியன்ட்களாக இந்த பைக் விற்பனைக்கு வரவுள்ளது.
இதில் பேஸிக் வேரியன்டை பொறுத்த வரை ரூபாய் 1.99 லட்சம் என்ற விலையிலும், மிட் வேரியன்டை பொருத்தவரை ரூபாய் 2.14 லட்சம் என்ற விலையிலும் டாப் வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 2.24 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு முன்னர் புக் செய்தால் அவர்களுக்கு ரூ10 ஆயிரம் மதிப்பிலான ஆக்சஸரீஸ் கிட் இலவசமாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பைக்கின் டிசைனை பொருத்தவரை பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பவர் கொண்ட இன்ஜின், மார்டனான டிசைன் மற்றும் மெட்டல் பாடி மூலம் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களில் அனைத்து வேரியன்ட்களிலும் விற்பனைக்கு வருகிறது.
இந்த பைக்கின் முன்பக்கம் வட்டமான ஹெட்லைட் எச் வடிவிலான எல்இடி டிஆர்எல், எல்இடி சிக்னல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் ஃப்யூயல் டேங்க் மஸ்குலரான லுக்கில் இருக்கிறது. ஹேண்டில் பார் பிளாட்டான ஹேண்டில் பாராக வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சீட் சிங்கிள் பீஸ் சீட்டாக இருக்கிறது. முன்பக்கம் ஃபென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரெட்ரோ மார்டன் லுக்கில் ரவுண்டு பார் என்டு மிரர் உடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் இன்ஜினை பொரத்தவரை 440 சிசி பேஸ் 2 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் தான் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிலும் இருக்கிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேவரிக் பைக் ஹைவேயில் டூரிங் அம்சங்கள் கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 27 எச்பி பவரையும் 36 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ நிறுவனம் தான் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எக்ஸ்440 பைக்கை தயாரித்து விற்பனைக்காக அனுப்பி வரும் நிலையில் அந்த எக்ஸ்440 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான். ஹீரோ மாதிரி இது எக்ஸ்440 பைக்கில் உள்ள பல்வேறு அம்சங்களை பொருத்திய பைக்காக இருக்கிறது. இதன் முன்பக்கம் யூஎஸ்பி போக் சஸ்பென்ஷனும் பின்பக்கம் கேஸ் சார்ஜர் ஷாக்அப்சர்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 17இன்ச் கொண்ட முன்பக்க வீலும் அகலமான பின்பக்கவீலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக் அலாய் வெர்ஷனில் மொத்தம் 187 கிலோ எடை கொண்டது ஸ்போக் வீலில் மொத்தம் 191 கிலோ எடை கொண்டது. மொத்தம் 13.5 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க்கை கொண்டதாக இந்த பைக் இருக்கிறது. மொத்தம் 2100 மிமீ நீளமும் 1388 மிமீ கிரவுண்ட் 178 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இது வழங்கப்பட்டுள்ளது. 803மிமீ சீட்டு உயரம் கொண்டதாக இருக்கிறது.
முன்பக்கம் 320 மிமீ மற்றும் பின்பக்கம் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் மார்க்கெட்டில் நேரடியாக டிரையம் ஸ்பீடு 400, ஹோண்டா சிபி 300 ஆர், கேடிஎம் 390 டியூக், ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350, ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 ஆகிய பைக் போட்டியாக களமிறங்குகிறது.