ஹார்லி, டிரையம்ப் வருகையால் சரிவை சந்திக்க துவங்கிய ராயல் என்ஃபீல்டு, இவ்வளவு கீழ விழுந்துடுச்சா!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 63,387 வாகனங்களை தான் இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ராயல் என்ஃபீல்டு போன்ற நிறுவனங்கள் திடீரென விற்பனை சரிவை சந்தித்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் கடந்த டிசம்பர் மாதம் மற்றும் 2023 காலண்டர் ஆண்டின் விற்பனை விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் டிசம்பர் மாதம் இந்நிறுவனம் சர்வீஸ் சந்தித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்நிறுவனம் மொத்தமாக 63,387 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 68,400 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது இந்த டிசம்பர் மாதம் மொத்தம் 5,133 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 7.33% விற்பனை சரிவாகும்.
இதில் 350 சிசிக்கு குறைவான செக்மெண்டில் உள்ள வாகனங்களை பொருத்தவரை கணபதி டிசம்பர் மாதம் 55,41 வாகனங்கள் விற்பனை ஆகியாகிருந்தது. 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 61,223 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும்போது கடந்த டிசம்பரில் 5822 வாகனங்கள் குறைவாக விற்பனை ஆகியுள்ளது இது 9.51% விற்பனை சரிவாகும்.
இதுவே 350சிசிக்கு அதிகமான செக்மெண்டில் கடந்த டிசம்பர் மாதம் 7,986 வாகனங்கள் விற்பனையாக இருந்தன. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7,177 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 809 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது 11.27% விற்பனை வளர்ச்சியாகும். 350சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் 87.40% விற்பனையையும் மற்றவை 12.60% பங்கையும் வைத்து வருகின்றன.
இதுவே கடந்த நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 350 சிசிக்கு குறைவான செக்மெண்டில் கடந்த நவம்பர் மாதம் 74,275 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இதை கடந்த டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 18,874 வாகனங்கள் விற்பனை குறைவாகும். இது 25.41% விற்பனை வீழ்ச்சியாகும்.
அதே நேரம் 350 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட செக்மெண்டில் 7,986 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த நவம்பர் மாதம் 5,976 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. இது 2010 வாகனங்கள் கூடுதலாக இந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளது. இது 33.63 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை எனது பிரித்து பார்க்கும்போது கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 57,291 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகி உள்ளன. ஏற்றுமதியை பொருத்தவரை 6,096 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன இதை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்பிடும்போது அப்பொழுது 59,821 வாகனங்கள் உள்நாட்டிலும் 8,579 வாகனங்கள் ஏற்றுமதியிலும் விற்பனையாகியுள்ளன. இந்த இரண்டிலும் சரிவு தான் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு விற்பது விற்பனையில் 4.23% ஏற்றுமதியில் 28.94% சரிவு ஏற்பட்டுள்ளது.இதுவே கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் 75,137 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளன. 5114 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி உள்ளன. இதில் உள்நாட்டு விற்பனையில் 23.75 சதவீத வீழ்ச்சியும் ஏற்றுமதியில் 19.20 சதவீத விற்பனை வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவன விற்பனை விபரத்தை பார்க்கும் போது கடந்த டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய அளவில் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மார்க்கெட்டில் வந்துள்ள புதிய போட்டியாளர்கள் தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தயாரிப்புகளை களம் இறக்கி உள்ளன. மக்கள் பார்வை அந்த வாகனங்களில் பக்கம் திரும்பி இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.