ரூ. 1 லட்சம் கடன் வழங்கும் அரசின் சூப்பர் திட்டம்… வயது வரம்பு உயர்வு..?

இந்த திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தயாரிப்பவர் மற்றும் தைப்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன்பெறுவார்கள்.

அதன்படி, பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ஒரு வாரம் பயிற்சி வழங்கப்படும். அதற்கு தினமும் ரூ. 500 வழங்கப்படும். மேலும் பயிற்சி முடிந்ததும் ரூ. 15,000 மதிப்புள்ள தொழில் கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். இறுதியாக ரூ.1 லட்சம் கடன் 5சதவீத வட்டியுடன் வழங்கப்படும். அதை 18 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.

விஸ்வகர்மா திட்டம், குலக்கல்வியை ஊக்குவிப்பது போல இருப்பதாக கருத்து தெரிவித்து, அத்திட்டத்தை, தமிழகத்தில் அரசு செயல்படுத்தாமல் உள்ளது. திட்டத்தை செயல் படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, மாநில திட்டக்குழு துணை தலைவர் தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழுவையும், தமிழக அரசு நியமித்தது.அதே சமயம், விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துமாறு, பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்தின் வயது வரம்பை, 18க்கு பதில், 35 வயதாக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *