ரூ.100 கோடிப்பே… ஹர்திக் பாண்டியாவின் டிரேடிங்கும், வெளியான தகவலும்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனச் சொல்லப்படும் நிலையில், அவர் குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் ஊடகச் செய்தி ஒன்றின்படி, ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் வாங்கிக்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இதற்காக ரூ.100 கோடி அளவுக்கு பணம் பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்தொகை ஊகம் தான் என்றாலும், பணப் பரிமாற்றமானது இந்தத் தொகையை சற்று கூடுதலாக அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

எனினும், உண்மையான தொகை பிசிசிஐக்கும், சம்பந்தப்பட்ட இரு அணிகளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஹர்திக்கை மும்பைக்கு விற்றதன் மூலம் குஜராத் அணியின் உரிமையாளரான சிவிசி கேப்பிடல் நல்ல லாபம் பார்த்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் 2024 மினி ஏலத்துக்கு முன்பாகவே, ட்ரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கெனவே பல சீசன்களாக விளையாடிய ஹர்திக் மும்பை அணி ஐந்து முறை கோப்பையை வெல்லவும் முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது ஹர்திக்கை கேப்டனாக்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஐந்து முறை கோப்பை வென்று கொடுத்த ரோகித்தை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகளும், அதேநேரம் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *