ரூ.10,000 இருந்தால் போதுமாம்!! இந்த புது ஹோண்டா பைக் உங்கள் பெயருக்கு வந்துவிடும் – ப்ரீ-புக்கிங்ஸ் ஸ்டார்ட்ஸ்

ஹோண்டா என்.எக்ஸ்500 (Honda NX500) பைக்கிற்கான அன்-அபிஷியல் ப்ரீ-புக்கிங்குகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும், இந்த ஹோண்டா பைக் குறித்தும் விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விரைவில் அதன் என்.எக்ஸ்500 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய எல்லா விதங்களிலும் தயாராகி வருகிறது. முதல்முறையாக, கடந்த 2023ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் ஹோண்டா என்.எக்ஸ்500 பைக் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது.

ஹோண்டாவின் மிடில்வெயிட் அட்வென்ச்சர் பைக்கான இது, இந்த 2024ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் விற்பனையில் உள்ள சிபி500எக்ஸ் பைக்கின் இடத்திற்கு புதிய என்.எக்ஸ்500 பைக் கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், என்.எக்ஸ்500 பைக்கிற்கான அதிகாரப்பூர்வமற்ற ப்ரீ-புக்கிங்குகள் இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், இந்த ப்ரீ-புக்கிங்கிற்கான டோக்கன் தொகையாக ரூ.10,000 வசூலிக்கப்படுவதாகவும், முன்பதிவு செய்பவர்களுக்கு பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற 2024 பிப்ரவரி – மார்ச் மாதத்தில் துவங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டாவின் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் பிக்விங் ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோன்று, என்.எக்ஸ்500 பைக்கும் ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளன. ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்களில் ஏற்கனவே ட்ரான்ஸால்ப் 750 மற்றும் ஆப்ரிக்கா ட்வின் என சில அட்வென்ச்சர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுடன் விரைவில் என்.எக்ஸ்500 பைக்கும் இணைய உள்ளது.

தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய என்.எக்ஸ்500 பைக்கும், விற்பனையில் உள்ள சிபி500எக்ஸ் பைக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையாகவே உள்ளன. இருப்பினும், என்.எக்ஸ்500 பைக்கில் சில அப்டேட்களை காண முடிகிறது. குறிப்பாக, பைக்கின் முன்பக்கத்தில் பெரிய அளவில் ஃபேயரிங் இடம் பெற்றுள்ளது. அதேபோல், புதிய டிசைனில் உள்ள ஹெட்லைட் எல்இடி தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்டிற்கு மேலே பெரிய விண்ட்ஸ்க்ரீன் கொடுக்கப்படுகிறது. இந்த ஹோண்டா அட்வென்ச்சர் பைக்கில் ரைடரின் இருக்கை ஆனது தரையில் இருந்து 830மிமீ உயரத்தில் கொடுக்கப்படுகிறது. சிபி500எக்ஸ் பைக் உடன் ஒப்பிடுகையில், என்.எக்ஸ்500 பைக்கின் பின்பக்க டெயில்லேம்ப் மாடர்னான தோற்றத்தில் உள்ளது. சர்வதேச சந்தையில் 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் என்.எக்ஸ்500 பைக் விற்பனை செய்யப்படுகிறது.

கிராண்ட் பிரிக்ஸ் சிவப்பு, மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் பேர்ல் ஹரிசோன் வெள்ளை என்பன அவை ஆகும். ஆனால், இதில் சிவப்பு மற்றும் கருப்பு நிற பெயிண்ட் ஆப்ஷன்களில் மட்டுமே என்.எக்ஸ்500 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய என்.எக்ஸ்500 பைக்கில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் 5-இன்ச் டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை எதிர்பார்க்கலாம்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *