தமிழ்நாட்டில் ரூ.12 கோடி பறிமுதல் – சென்னையில் மட்டும் ரூ.5.07 கோடி பறிமுதல் செய்த பறக்கும் படை
சென்னையில் மட்டும் ரூ.5.07 கோடி பறிமுதல் செய்ததாக தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் 2024 என்ற வகையில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இங்கு 63,751 முதியர்கள் உள்ளனர். 10,370 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் வீட்டிலேயே வாக்களிக்கும் முறை கொண்டு வரப்படும் என கூறினார். மேலும் வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். சென்னையை பொறுத்தவரை ஓட்டுப்பதிவு 60% ஆகத் தான் எப்போதும் இருக்கும். சராசரியாக மாநிலத்தில் 72% இருக்கும், இதை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அனைத்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கூட மாற்றுத்திறனாளிகளை சமமாக நடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதன்படி தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம் என கூறினார்.
சென்னையை பொறுத்தவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.5.07 கோடி அளவிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகபட்சமாக ரூ.50,000 ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் பணத்தை கையில் எடுத்துச் சென்றால் உரிய ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். அதேபோல நகை உற்பத்தி செய்யும் நகைக்கடை உரிமையாளர்களும் உரிய ஆவணத்தோடு நகைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
இதனிடையே, பூந்தமல்லி அருகே புதுச்சத்திரம் பகுதியில் வந்த கார் ஒன்றை, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். அப்போது, காரில் ரூ.96 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பூந்தமல்லி பகுதியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் ரூ.2 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று மாலை வரை தமிழ்நாடு முழுவதும் ரு.12 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தலைமை தேர்தல் அதிகார் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.