ரூ.15,000 கோடி Antilia ரகசியம்: 27 மாடி இருந்தும், 26வது மாடியில் அம்பானிகள் வசிப்பது ஏன் தெரியுமா?

அம்பானி குடும்பத்தினர் தங்களது அன்டிலியா பங்களாவின் 26வது மாடியில் வசிப்பதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

அன்டிலியாவின் ஆடம்பரங்கள்
மும்பையில் உள்ள வானளாவிய கட்டிடங்களில் மிகவும் பிரபலமானது அன்டிலியா. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் இந்த 27 மாடிகள் கொண்ட பிரமிக்க வைக்கும் கட்டடம் சுமார் 15,000 கோடி மதிப்பிலானது.

அதன் ஆடம்பரமான வசதிகள் மற்றும் கலை நேர்த்தியுடன் கவனத்தை ஈர்க்கிறது. அம்பானிகளின் வீடு என்று அழைக்கப்படும் அளவுக்கு ஆடம்பரமான வசதிகளைக் கொண்டது அன்டிலியா 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 173 மீட்டர் உயரம் கொண்டது.

இந்த 27 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் ஒரு ஹெல்த் ஸ்பா, சலூன், மூன்று நீச்சல் குளங்கள், ஒரு பால்ரூம், யோகா மற்றும் நடன ஸ்டுடியோக்கள். 3 helipads, பல அறைகள் கொண்ட கார் பார்க்கிங், 9 வேகமான மின்தூக்கிகள் ஆகியவை உள்ளன.

சுமார் 600 ஊழியர்கள் இந்த மாளிகையை பராமரிக்கின்றனர். இயற்கை அழகை சேர்க்கும் விதமாக, அழகாக வடிவமைக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் தொங்கும் தோட்டம் ஒன்றும் அன்டிலியாவில் உள்ளது.

26வது மாடியின் ஈர்ப்பு
இந்த பிரம்மாண்ட பங்களாவில் 27 தளங்கள் இருப்பினும், அம்பானிகள் ஏன் 26வது மாடியை தேர்வு செய்து வசிக்கிறார்கள் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றதாம்.

அவற்றில் முக்கியமானதாக சொல்லப்படுவது, Times Now Hindi அறிக்கையின்படி, இயற்கை வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை முன்னுரிமைப்படுத்தியே நீதா அம்பானி 26வது மாடியை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

மும்பையின் பரபரப்பான காட்சியை தாண்டி செல்லும் 26வது மாடி, ஒவ்வொரு அறைக்கும் போதுமான சூரிய ஒளியையும், புத்துணர்வை தரும் காற்றையும் வழங்குகிறது.

ஆடம்பர வசதிகளுக்கு மத்தியில் இயற்கை அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அம்பானிகளின் ஆரோக்கியமான வாழ்க்கை சூழல் மீதான அக்கறையை பறைசாற்றுகிறது.

இந்த 26வது மாடியில் தான் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா அவர்களது குழந்தைகள் பிருத்வி ஆகாஷ் அம்பானி வேதா ஆகாஷ் அம்பானி என அனைவரும் குடும்பமாக வசிக்கின்றனர்.

மிக நெருங்கியவர்கள் தவிர வேறு யாரும் இந்த 26வது தளத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், 27வது மாடி விருந்தினர்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *