ரூ.20 லட்சம் கோடின்னா சும்மாவா.. முகேஷ் அம்பானியே கண் கலங்கிட்டார்ப்பா..!!
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி புதன்கிழமை வைப்ரென்ட குஜராத் உச்சி மாநாட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எப்போதும் ஒரு குஜராத்தி நிறுவனம் தான் என்று பேசிய நொடியில் இருந்து ரிலையன்ஸ் பங்குகள் உயர்வுடனே உள்ளது.
இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பு முதல் முறையாக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டையும், முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு நீண்ட காலத்திற்குப் பின்பு 100 பில்லியன் டாலரை தாண்டி 102.3 பில்லியன் டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் மதிப்புப் புதன்கிழமை வர்த்தக முடிவில் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதில் முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் மதிப்பு வரலாற்று உச்ச அளவான 2658.95 ரூபாயை தொட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கும் வேளையில் இந்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பெரும் பங்கீட்டை கொண்டு உள்ளது, கிட்டதட்ட 90 சதவீத மதிப்பீட்டைக் கொண்டு உள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 17.92 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சமீபத்தில் முகேஷ் அம்பானி பெரும் கனவுடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் 1.53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஜியோ பைனான்சியல் தற்போது அமெரிக்காவின் பிளாக்ராக் உடன் இணைந்து மியூச்சவல் பண்ட் வர்த்தகத்தில் இறங்கத் திட்டமிட்டு இதற்கான உரிமத்தை பெற காத்திருக்கிறது. 2015 முதல் ஒவ்வொரு வருடமும் லாபத்தைக் கொடுத்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2023ல் 11 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது, 2014ல் 0.5 சதவீத இழப்பைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்3.07 சதவீத உயர்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.முகேஷ் அம்பானி-யின் 5 வாக்குறுதி.. மோடி செம ஹேப்பி..!! ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனம்..!இன்றைய வர்த்தக முடிவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன தெரியுமா..? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – 17.93 லட்சம் கோடி ரூபாய் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் – 1.53 லட்சம் கோடி ரூபாய் Network18 – 12,500 கோடி ரூபாய் TV18 ஒளிபரப்பு – 11,040 கோடி ரூபாய் SW சோலார் – 10,386 கோடி ரூபாய் அலோக் இண்டஸ்ட்ரீஸ் – 18,619 கோடி ரூபாய் ஜெஸ்ட் டயல் – 7,141 கோடி ரூபாய் ஹாத்வே கேபிள் & டேட்டாகாம் – 4,407 கோடி ரூபாய் டென் நெட்வொர்க்ஸ் – 3,123 கோடி ரூபாய் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ரா – 2,136 கோடி ரூபாய் ஹாத்வே பவானி கேபிள்டெல் – 16.95 கோடி ரூபாய்