ரூ.200 கோடி..! இந்தியாவில் அதிக சம்பளம் பெறுவது இவர் தான்.. யார் இந்த சுபம் மஹேஸ்வரி..?
இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நிறுவனர்கள் பட்டியலில் ரூ.200 கோடி பெறும் சுபம் மஹேஸ்வரி தான் டாப் என்று கூறப்படுகிறது. Inc42 நிறுவனத்தின் ஸ்டார்ட்அப் நிறுவனர் சம்பளம் 2023 நிதியாண்டு டிராக்கரின் அறிக்கையின்படி, சுபம் மகேஸ்வரி 2023 நிதியாண்டில் அதிக வருமானம் ஈட்டிய நிறுவனராக உள்ளார்.
வருடாந்திர ஊதியமாக 2023 ஆம் ஆண்டில் சுபம் மஹேஸ்வரி சுமார் 200.7 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். இன்போசிஸ் சலில் பாரிக், விப்ரோ தியரி டெலாபோர்டே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி, டாடா சன்ஸ் சந்திரசேகரன் ஆகியோர் 100 கோடி ரூபாய் சம்பளம் பெறவே தடுமாறி வரும் வேளையில் இவர் மட்டும் எப்படி 200 கோடி சம்பளம் பெறுகிறார்..? யார் இவர்..?
சுபம் மஹேஸ்வரி-ஐ ஸ்டார்ட்அப் துறையை கூர்ந்து கவனிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அறியாதவர்களுக்கு ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர். தொழில் உலகத்தில் அவர் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
சுபம் மகேஸ்வரி, இந்தியாவின் மிகப்பெரிய குழந்தை மற்றும் தாய் பராமரிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் ஃபர்ஸ்ட் க்ரையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் போது, இ-காமர்ஸ் புரட்சிக்கு வழிவகுத்துள்ளார்.
ஒரு பெற்றோராக தனது குழந்தைக்காக உயர்தர குழந்தைப் பராமரிப்புப் பொருட்களைத் தேடும்போது தான் சுபம் மகேஸ்வரிக்கு ஃபர்ஸ்ட் க்ரையைத் தொடங்கும் யோசனை உதித்தது.
தரமான தயாரிப்புகளின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான தயாரிப்புகளை எப்படி வாங்குகிறார்கள் என்பதை மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதை அவர் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் 2010 இல் அமிதாவா சாஹாவுடன் இணைந்து BrainBees சொல்யூஷன்ஸ் மற்றும் அதன் முதன்மை பிராண்டான FirstCry ஐ நிறுவினார்.
குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் ஆன்லைன் விற்பனையாளராக இந்த வணிகம் தொடங்கியது, நாடு முழுவதும் கடைகளைத் திறந்ததன் மூலம் விரைவாக சுபம் மஹேஸ்வரியின் நிறுவனம் விரிவடைந்தது.
சுபம் மகேஸ்வரி ஆரம்பத்தில் அமிதவா சாஹாவுடன் இணைந்து பிரைன்விசா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை நிறுவினார். ஆனால் வணிகம் விற்கப்பட்ட பிறகு, அவர் ஃபர்ஸ்ட் க்ரையைத் தொடங்க பிரைன் பீஸைப் பயன்படுத்தினார்.
மகேஸ்வரி தனது ஆரம்பக் கல்வியை அபீஜே பள்ளியில் பயின்றார். தில்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அதன் பிறகு, பிஜிடிஎம் பெறுவதற்காக ஐஐஎம்-அகமதாபாத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.
சுபம் மஹேஸ்வரி தற்போது ரூ. 1577 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் Amazon SMB விருதுகளை வென்ற இந்தியாவின் பீயிங் செஃப், $10க்கு குறைவான விலையில் உணவுப் பொருட்களையும், புதிதாக சமைக்கப்பட்ட உணவுகளையும் வழங்குகிறது. வீடுகள் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
சுபம் மகேஸ்வரி 2014 இல் பீயிங் செஃப் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்தார்.