வங்கி கணக்கில் வரும் ரூ.2,000… பிஎம் கிசான் திட்டத்தின் 16-வது தவணை தொகை தேதி அறிவிப்பு

மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்திற்கான (PM-KISAN) 16-வது தவணைத் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தப்படவுள்ளது என இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் உறுதிப்படுத்தியுள்ளது.

சரியாக பிப்ரவரி 28-ம் தேதி புதன்கிழமை பிஎம் கிசான் திட்டத்தின் 16-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி மகராஷ்ட்ரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்திலிருந்து வெளியிடுவார் என PM-KISAN-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிஎம் கிசான் திட்டமானது முழுதும் இந்திய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, உலகிலேயே மிகப்பெரிய நேரடி பயன் பரிமாற்றங்களில் (DBT) ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் தங்களது விவசாயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவியாக இந்த தொகை தரப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த வியசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6,000 என நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசால் செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் பயனாளர்களில் பெயர் பட்டியலில் ஒருவர் தன் பெயர் உள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

அதிகாரப்பூர்வ இணையதளம்:
முதலில் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in செல்லுங்கள்.

பயனாளர் நிலை
இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ‘பயனாளர்கள் நிலை’ (‘Beneficiary Status) என்று இருப்பதை க்ளிக் செய்யவும்.

ஆப்ஷனை தேர்வு செய்யவும்
பயனாளர்கள் நிலையை க்ளிக் செய்ததும், அதில் ஆதார் கார்டு எண், உங்கள் கணக்கு எண் அல்லது மொபைல் நம்பர் என மூன்று ஆப்ஷன் கேட்கப்படும். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.

தரவுகளை பெறுங்கள்
நீங்கள் ஆப்ஷனை தேர்வு செய்த பின் தரவுகளை பெறுங்கள் (Get Data) என்பதை க்ளிக் செய்யவும்.

பட்டியலில் உங்கள் பெயர்
இப்போது ஒரு பட்டியல் உங்கள் முன் கிடைக்கும். அதில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பாருங்கள்.

பிஎம் கிசான் திட்டத்திற்கான உதவி மைய எண்கள் :

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தாலோ அல்லது உதவிகள் தேவைப்பட்டாலோ PM-Kisan திட்டத்தின் உதவி எண்களான 1555261 மற்றும் 1800115526 அல்லது 011-23381092 எண்களை அழையுங்கள். இது தவிர பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரியான pmkisan-ict@gov.in மூலமும் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கான பதிலை பெறலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *