கர்ப்பிணிகளுக்கு ரூ.5000! தாய்மார்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
தாய்மார்களுக்கு பேறுகாலத்தில் தேவைப்படும் பொருளாதார உதவியை வழங்குவதற்காகவும் உரிய ஊட்டச்சத்து பொருள்கள் கிடைக்கவும் மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டம் தான் மாத்ரு வந்தனா யோஜனா. இந்திரா காந்தி மாத்ரு சாயோக் யோஜன என்று அறியப்பட்ட இந்தத் திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் பயனடைய முடியும். முதல் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது 19 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் ரூ.5,000 உதவித்தொகை பெறலாம். மொத்தமாக மூன்று தவணைகளில் இத்தொகையைப் பெறலாம். முன்னர் இத்தொகை ரூ.6000 ஆக இருந்தது.
மாத்ரு வந்தனா யோஜனா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இத்திட்டத்தை 2017ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தில் தாய்மார்கள் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பு வரையான பேறுகாலத்தில் மூன்று தவணைகளாக ரூ.5000 நிதியுதவி பெறலாம்.
இத்திட்டம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் மூல் செயல்படுத்தப்படுகிறது. இந்த அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான wcd.nic.in மூலமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்குச் சென்றும் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் இணையலாம்.
இத்திட்டம் வாயிலாக அனைத்து கர்ப்பிணிகளும் இலவச பேறுகால மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும். கருவுற்றிருக்கும் காலத்திலும், குழந்தை பிறந்த பின்பும் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்கும் வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
19 வயதுக்குக் குறைவான பெண்கள் கருவுற்றிருந்தால் இத்திட்டம் மூலம் பயன்பெற முடியாது என்பது முக்கியமான நிபந்தனை. இத்திட்டத்தில் வழங்கப்படும் நிதியுதவி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.