குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.62 லட்சம் நிதி உதவி..? எங்கு தெரியுமா ?

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது.இது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் தொகையை அதிகரிக்க தென் கொரியா நிர்வாகம் புதிதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு பக்கம் வடகொரியாவின் அச்சுறுத்தல் இருந்தாலும் இன்னொரு பக்கம் தொழில்நுட்பத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு தென்கொரியா. ஆனால் அதே நேரத்தில் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை 5 கோடி என்ற நிலையில் ஆண்டுக்கு ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.
திருமணத்தின் மீது இந்த நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லை என்பதால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 62 லட்சம் பரிசு என்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்றும் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து இந்த பணத்திற்காக தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வமாக முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.