ரூ.7000 கோடி நிறுவனம்..! தனி ஒருவராக சாதித்துக் காட்டிய பெண்: ஜெயந்தி சவுகான் சொத்து மதிப்பு

இந்தியாவின் முன்னணி பாட்டில் தண்ணீர் நிறுவனமான பிஸ்லரி இண்டர்நேஷனலின் நிறுவனத்தின் நிறுவனர் ரமேஷ் சவுகான் ஓய்வு பெற்ற பிறகு, மகள் ஜெயந்தி சவுகான் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார்.

ஜெயந்தி சவுகான் வெற்றிக்கதை
ரமேஷ் சவுகான் பிஸ்லரி நிறுவனத்தின் தலைவராக இருந்த வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, அவரது மகளான ஜெயந்தி சவுகான் பிஸ்லரி நிறுவனத்தின் தலைவராக உயர்ந்துள்ளார்.

அவரது தந்தை ரமேஷ் சவுகான் தன்னுடைய வயது முதிர்ச்சி மற்றும் தனக்கு பிறகு நிறுவனத்தை நடத்த சரியான ஆள் இல்லை என்றும் உணர்ந்து நிறுவனத்தை விற்க முன்வந்தார்.

ஆனால், அனைத்தையும் மாற்றும் விதமாக அவரது மகள் ஜெயந்தி சவுகான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று, இன்று பிஸ்லரி நிறுவனத்தை வெற்றிகரமான நிறுவனமாக உயர்த்தியுள்ளார்.

அத்துடன் Rev, Pop, மற்றும் Spyci Jeera போன்ற பெயர்களில் குளிர் பானங்களையும் சந்தையில் பிஸ்லரி நிறுவனத்தின் தலைவர் ஜெயந்தி சவுகான் அறிமுகப்படுத்தினார்.

ரிலையன்ஸ் நிறுவனம் குளிர்பான விற்பனை சந்தையில் கால்பதிப்பதற்காக Pure Drinks என்ற நிறுவனத்தை கைப்பற்றி இருந்த நிலையில், ஜெயந்தி சவுகானின் பிஸ்லரி குளிர்பானங்கள் அவர்களுக்கு சந்தையில் பெரும் சவாலாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

சொத்து மதிப்பு
பிஸ்லரி இன்டர்நேஷனல் தண்ணீர் பாட்டில் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.7000 கோடியாகும். இதனை தனி ஒருவராக ஜெயந்தி சவுகான் நிர்வகித்து வருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *