ஓடியாங்க.. ஓடியாங்க.. தங்கம் விலை டமாலெனச் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?
ஈரான் நாட்டின் IRGC என அழைக்கப்படும் இஸ்லாமிய புரட்சிகரக் காவலர் படை, ஈராக் நாட்டின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் உள்ள இலக்குகளை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது மூலம் டாலர் மதிப்பு உயர்ந்து, தங்கம் விலை பெரிய அளவில் சரிந்துள்ளது.
இதன் எதிரொலியாகச் சர்வதேசச் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2048 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்த வேளையில் இன்று 2023 டாலர் வரையில் குறைந்துள்ளது.கிட்டதட்ட ஓரே நாளில் 25 டாலர் வரையில் குறைந்துள்ளது.
இதுபோன்ற மெகா சரிவு இதுவரையில் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மத்திய கிழக்கு நாடுகளில் உருவான இந்தப் பிரச்சனை டாலர் மதிப்பு நீண்ட காலத்திற்குப் பின்பு 103.40 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் உருவான பிரச்சனை குறையும் வரையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவிலேயே இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.07 சதவீதம் சரிந்து 61,969 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 0.30 சதவீதம் சரிந்து 71,877 ரூபாயாக உள்ளது.இதன் எதிரொலியாக இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் குறைந்து 58,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் உயர்ந்து 63,380 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 46,480 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை 600 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 77,400 ரூபாயாக உள்ளது, இதைத் தொடர்ந்து இன்று இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தத் துவங்கியிருக்கும் பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 410 ரூபாய் குறைந்து 23,860 ரூபாயாக உள்ளது.22 கேரட் 10 கிராம் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 58,100 ரூபாய், மும்பை – 57,700 ரூபாய், டெல்லி – 57,850 ரூபாய், கொல்கத்தா – 57,700 ரூபாய், பெங்களூர் – 57,700 ரூபாய், ஹைதராபாத் – 57,700 ரூபாய், கேரளா – 57,700 ரூபாய், புனே – 57,700 ரூபாய், பரோடா – 57,750 ரூபாய், அகமதாபாத் – 57,750 ரூபாய், ஜெய்ப்பூர் – 57,850 ரூபாய், லக்னோ – 57,850 ரூபாய், கோயம்புத்தூர் – 58,100 ரூபாய், மதுரை – 58,100 ரூபாய்,24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 63,380 ரூபாய், மும்பை – 62,950 ரூபாய், டெல்லி – 63,100 ரூபாய், கொல்கத்தா – 62,950 ரூபாய், பெங்களூர் – 62,950 ரூபாய், ஹைதராபாத் – 62,950 ரூபாய், கேரளா – 62,950 ரூபாய், புனே – 62,950 ரூபாய், பரோடா – 63,000 ரூபாய், அகமதாபாத் – 63,000 ரூபாய், ஜெய்ப்பூர் – 63,100 ரூபாய், லக்னோ – 63,100 ரூபாய், கோயம்புத்தூர் – 63,380 ரூபாய், மதுரை – 63,380 ரூபாய்,1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 46480 ரூபாய், மும்பை – 46160 ரூபாய், டெல்லி – 46280 ரூபாய், கொல்கத்தா – 46160 ரூபாய், பெங்களூர் – 46160 ரூபாய், ஹைதராபாத் – 46160 ரூபாய், கேரளா – 46160 ரூபாய், புனே – 46160 ரூபாய், பரோடா – 46200 ரூபாய், அகமதாபாத் – 46200 ரூபாய், ஜெய்ப்பூர் – 46280 ரூபாய், லக்னோ – 46280 ரூபாய், கோயம்புத்தூர் – 46480 ரூபாய், மதுரை – 46480 ரூபாய்,தங்கம் விலை தடாலடி சரிவு.. செம சான்ஸ் வந்திருக்கு மக்களே..!!