ரஷ்யா – மொஸ்கோவில் ஆயுததாரிகள் தாக்குதல்
ரஷ்யா – மொஸ்கோ புறநகர் பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 40 வரை பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பெருந்திரலான மக்கள் நிரம்பியிருந்த குரோகஸ் சிட்டி இசைக்கச்சேரி அரங்கில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு
துப்பாக்கி சூடுகள் மற்றும் வெடிப்புகளுக்கு மத்தியில் பீதியடைந்த இசை கலைஞர்கள் மறைந்திருக்கும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
https://twitter.com/BRICSinfo/status/1771245831913435266
இதன்போது பெரிய தீ வளாகத்தை சூழ்ந்துள்ளதாகவும், ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புதுரை இன்னும் ஆயுததாரிகளைதேடி வருகிவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை நிலைமையைப் பற்றி மேலும் அறிய முயற்சிப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியது.
அத்துடன் இந்த தாக்குதலில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.