விண்வெளிக்கு அணுகுண்டை அனுப்பும் ரஷ்யா: உருவாகியுள்ள அச்சம்
ரஷ்யா விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்புவதாக அமெரிக்கா தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ள விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
விண்வெளிக்கு அணுகுண்டை அனுப்பும் ரஷ்யா
ரஷ்யா, விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், ரஷ்ய பொறியாளர்கள் விண்வெளிக்கு அனுப்புவதற்கான அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரம் உறுதியாக நம்புவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க தலைவர்கள் அவசரமாக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளதையடுத்து அச்சம் உருவாகியுள்ளது.
ஆனால், அந்த குண்டு பூமியின் மீது வீசப்படுவதற்காக அல்ல, விண்வெளியில் இருக்கும் சேட்டிலைட்டுகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக என்றும் அமெரிக்க தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.