ரஷ்ய தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: ஜெலன்ஸ்கி

ரஷ்யா- மொஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மொஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புடினும். மற்றவர்களும் எங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள்.

உக்ரைனுக்கு எதிரான போர்
அவர்களின் முறைகள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறோம். எப்போதும் மற்றவர்களை குறை கூறுவார்கள். அவர்கள் உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர்.

பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர். அவர்கள் மக்களை சித்ரவதை செய்கிறார்கள்-பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எங்களுக்கு எதிராக போரை நடத்துகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ரஷ்ய குடிமக்களை பற்றி பேசுவதற்குப் பதிலாக, இத்தாக்குதலை உக்ரைனுடன் எவ்வாறு இணைப்பது என்று யோசித்து புடின் ஒரு நாள் அமைதியாக இருந்தார். உக்ரேனிய மண்ணில் தற்போது கொல்லப்படும் நூறாயிரக்கணக்கான ரஷ்யர்கள், அவர்கள் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயமாக பயங்கரவாதிகளை தடுத்திருக்க முடியும்.

புடின் தனிப்பட்ட அதிகாரத்திற்காக இந்த சூழ்நிலைகளில் அதிகமானவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பார். தீவிரவாதிகள் எப்போதும் தோற்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *