ரஷ்ய ஜனாதிபதி புடின் வகுத்துள்ள கொடூர திட்டம்… கசிந்த ராணுவ ஆவணங்களால் அதிர்ச்சி
மேற்கத்திய நாடுகளை மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் கொண்டு சென்று நிறுத்திவிடுவார் என்ற அச்சம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது எழுந்துள்ளது.
புடினின் கொடூர திட்டம்
கசிந்த ராணுவ ஆவணங்களால் விளாடிமிர் புடினின் கொடூர திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளதாகவே கூறப்படுகிறது.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி 2025ல் மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியத்தை புடின் உருவாக்குவார் என்றும் அப்போது அரை மில்லியன் நேட்டோ மற்றும் ரஷ்ய வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்வார்கள் என்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சிக்கியுள்ள அந்த ஆவணங்களை பிரபல பத்திரிகை ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அடுத்த குளிர்காலத்தில் நேட்டோ மீது இருமுனைத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாகவும் அடுத்த கோடைகாலத்தில் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் 200,000 வீரர்களை திரட்ட புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் உக்ரைன் மீது வலுவான தாக்குதலை முன்னெடுத்து, ஜூன் மாதம் வெற்றியை பதிவு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
போர் வெடிக்க வாய்ப்பாக அமையும்
இதனையடுத்து மேற்கத்திய நாடுகள் மீதான தாக்குதலை புடின் முன்னெடுக்க உள்ளார். இதனிடையே, நேட்டோவின் கிழக்குப் பகுதியில் துருப்புக்கள் மற்றும் ஏவுகணைகளை கட்டமைக்க புடின் திட்டமிடலாம் என்றும், மேற்கு நாடுகளை பகைத்து பால்டிக் நாடுகளை சீர்குலைக்க புடின் முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.