கேரளாவில் நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: ஒரு சுவாரஸ்ய தகவல்
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ரஷ்ய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பு நடப்பதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல்
ரஷ்யாவில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இன்று, அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல், 17ஆம் திகதி வரை தேர்தல் நடைபெறுகிறது. ரஷ்யாவைப் பொருத்தவரை, எதிர்க்கட்சியினர் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டார்கள், அல்லது சிறையிலோ தலைமறைவாகவோ இருக்கிறார்கள் என்பதால், புடினுக்குதான் வெற்றி என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அப்படி புடின் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், அவரது பதவிக்காலம் குறைந்தபட்சம் 2030 வரை நீடிக்கும். 2020இல் ரஷ்ய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், அவர் மீண்டும் தேர்தலில் நிற்கக்கூடும், அப்படியே 2036வரை பதவியில் நீடிக்கவும் கூடும்.
கேரளாவில் நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ரஷ்ய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகிறது. அதாவது, இந்தியாவில் வாழும் அல்லது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ரஷ்யர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய தூதரத்தில் வாக்குச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்கு தங்களுக்கு ஏற்பாடு செய்து தந்த அனைவருக்கும், ரஷ்ய தூதரகத்துக்கும், குறிப்பாக, சென்னையிலிருக்கும் ரஷ்ய துணைத் தூதரகத்துக்கும், தானும் கேரளாவில் வாழும் தன் சக ரஷ்யக் குடிமக்களும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவிக்கிறார் ரஷ்யக் குடிமகளான Ulia என்பவர்