சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ விமானம்: 65 பிணைக் கைதிகளுடன் பறந்ததா?
ரஷ்யாவின் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று பெல்கோரோட் பகுதியில் உக்ரைனிய படையால் வீழ்த்தப்பட்டு இருப்பது உக்ரைன்-ரஷ்யா இடையிலான ராணுவ நடவடிக்கையில் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.
தாக்கப்பட்ட ரஷ்ய ராணுவ விமானம்
ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் நாட்டின் தெற்கில் உள்ள பெல்கோரோட் (Belgorod) பகுதியின் யப்லோனோவோ(Yablonovo) நகரில் ரஷ்ய ராணுவத்தின் போக்குவரத்து விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான இலியுஷின்-76(Ilyushin-76) விமானத்தில் சென்றவர்கள் அல்லது கொண்டு செல்லப்பட்டவை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.
ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தகவலின், Ilyushin-76 விமானத்தில் 65 பிணைக்கைதிகள் மற்றும் 9 மற்ற உறுப்பினர்கள் விமானத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
கீவ் போஸ்ட் தகவலின்படி, உக்ரைனிய ஜெனரல் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் வீழ்த்தப்பட்ட விமானத்தில் வான் பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்த ஏவுகணைகளை ரஷ்யா கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ரஷ்யாவின் ராணுவ போக்குவரத்து விமானமான Ilyushin-76ஐ உக்ரைன் தான் சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா நேரடியாக டெலிகிராமில் குற்றம்சாட்டியுள்ளது.