உக்ரைன் இராணுவத்திற்கு நிதி திரட்டிய ரஷ்ய பெண் கைது

ரஷ்யாவில் உக்ரைன் இராணுவத்திற்கு நிதி திரட்டியதாகவும், சமூக வலைதளத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக பதிவுகளைப் பகிர்ந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யா, அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமைப் பெற்றுள்ள க்சேனியா கரெலினா எனும் 33 வயது பெண்ணை தேச துரோக குற்றத்தின் கீழ் ரஷ்யாவின் மத்திய பதுகாப்பு அமைப்பு கைது செய்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவான கூட்டம்
குறித்த பெண் 51.80 டொலர் நிதியை திரட்டியதாகக் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் கண்கள் கட்டப்பட்டு, அதிகாரிகளால் குறுகிய பாதை வழியாக அழைத்துச் செல்லப்படும் காணொளி வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்காவில் உக்ரைனுக்கு ஆதரவான நிகழ்த்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.