S.J.Suryah – வில்லன் ரோல் ஓவர்.. மீண்டும் ஹீரோவாகும் எஸ்.ஜே.சூர்யா?.. யார் இயக்குநர் தெரியுமா?

சென்னை: வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா முதல் படத்திலேயே வெற்றி இயக்குநர் என்ற பெயரை பெற்றார்.

அதனையடுத்து அவர் இயக்கிய படங்கள் வெற்றி பெற்றாலும் திடீரென காணாமல் போனார். அவர் இயக்குநராக ஜொலித்தாலும் அவரது முதல் ஆசை என்பது நடிகராக வேண்டும் என்பதுதான். சொல்லப்போனால் அதற்காகத்தான் அவர் இயக்குநராகவே மாறினார்.

வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்து வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து விஜய்யை வைத்து அவர் இயக்கிய குஷி படமும் மெகா ஹிட்தான். இரண்டு படங்களிலேயே மெகா ஹிட் இயக்குநர் என்ற பெயரை பெற்ற சூர்யாவுக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை ஆரம்பத்திலிருந்தே இருந்தது. அதன்படி நியூ படத்தின் மூலம் தன்னைத்தானே இயக்கி ஹீரோவாக மாறினார். தொடர்ந்து சில படங்கள் இயக்கியும் நடித்த அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

ரீ என்ட்ரி: பல வருடங்கள் கழித்து இசை என்ற படத்தை இயக்கி ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்தார். படம் சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்த திரையுலகமே மிரண்டு போனது. உண்மையில் குடிகாரனாக நடித்தாரா இல்லை குடித்துவிட்டு நடித்தாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.

மாநாடு: இறைவி படத்துக்கு பிறகு பல படங்களில் நடித்தார். ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்த அவர் மாநாடு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு உச்சம் சென்றது எனலாம். மாநாட்டில் அவரது நடிப்புக்கு ரசிகர் கூட்டம் கூடியது. இதனால் பட வாய்ப்புகளும் தொடர்ந்து அவருக்கு வர தொடங்கின. ஒருவழியாக நடிகராக பிஸியாக இருக்க வேண்டும் என்ற சூர்யாவின் ஆசையும் நிறைவேற ஆரம்பித்திருக்கிறது.

தொடர் வாய்ப்புகள்: அதன்படி இந்தியன் 2, கேம் சேஞ்சர், தனுஷின் 50ஆவது படம், லன் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் நடித்திருந்தார். இதில் ஜிகர்தண்டா 2வில் பாசிட்டிவ் ரோலையும், மார்க் ஆண்டனியில் நெகட்டிவ் ரோலையும் ஏற்று இரண்டு ரோல்களிலும் வெரைட்டி காட்டி மாஸ் காட்டியிருந்தார் அவர்.

ஹீரோவாகும் சூர்யா: இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ, கார்த்தியை வைத்து சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில்தான் அவர் நடிக்கவிருக்கிறாராம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *