சச்சின், தோனி, விராட் கோலிலாம் பக்கத்தில் கூட வர முடியாது.. வியக்க வைக்கும் ரொனால்டோ சொத்து மதிப்பு!
போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்
கால்பந்து விளையாட்டு பற்றி எந்த அடிப்படையும் தெரியாதவர்களுக்கு கூட தெரிந்த இரு பெயர்களில் ஒன்று லயோனல் மெற்றி.. இன்னொரு பெயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டில் உள்ள சான்டோ ஆன்டனியோ என்ற பகுதியைச் சேர்ந்த ரோனால்டோ, வீட்டின் கடைசி குழந்தை. தாய், தந்தை, இரு அக்கா மற்றும் ஒரு அண்ணன் என்று ரொனால்டோவின் குடும்பம் பெரியது.
அதில் வாழ்வாதாரத்திற்காக அம்மா சமையலராகவும், தந்தை தோட்டக்காரராகவும் பணியாற்றி வந்தனர். பிள்ளைகளுக்கு நல்ல உணவை கொடுக்கும் அளவிற்கு கூட வருமானம் இல்லை. அந்த சூழலில் இருந்து கல்வி கூட இல்லாமல் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளுடன் வலம் வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கடந்த 2022ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் அல் நசர் கிளப்பில் இணைந்ததற்காக ரூ.1,770 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. கால்பந்து விளையாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த வீரரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
அதேபோல் 2016ஆம் ஆண்டு நைக் நிறுவனம் தரப்பில் ரொனால்டோவ்ய்டன் வாழ்நாள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது அதன் மதிப்பு ரூ. 830 கோடியாகும். அதேபோல் ரியம் மாட்ரிட் அணிக்காக 9 ஆண்டுகள் ஆடிய ரொனால்டோவின் ஊதியம் ஒவ்வொரு ஆண்டுக்கும் உயர்ந்து கொண்டே சென்றது.
அதன்பின் யுவண்டஸ் அணிக்காக 4 ஆண்டுகள் ஆடிய போது, அவரின் ஒப்பந்தன் ரூ. 531 கோடிக்கு போடப்பட்டது. அதேபோல் போர்ச்சுகலில் ரூ.17.93 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களா உள்ளது. அதேபோல் 30 சூப்பர் கார்களை ரொனால்டோ சொந்தமாக வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏராளமான நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார் ரொனால்டோ. இதனால் ரொனால்டோ ஓய்வை அறிவிக்கும் போது, அவர் மெஸ்ஸியை விடவும் அதிக வருவாய் ஈட்டும் வீரராக இருப்பார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.