சச்சின், டிராவிட் சாதனையை முறியடிக்க போகும் கோலி, ரோகித் – இது வேற லெவல் சார்
இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே பல சூப்பர் ஸ்டார்கள் மிகப் பிரபலமாக ரசிகர் மத்தியில் இருக்கிறார்கள். அதுவும் சில ஸ்டார்கள் ஜோடி சேர்ந்து விளையாடினால் நிச்சயம் போட்டி களைகட்டும்.
அந்த வகையில் சச்சின்- கங்குலி, சச்சின்- டிராவிட், தோனி -ரெய்னா, கோலி -ரோஹித் என பல வீரர்கள் இணைந்து பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள். உடன்பிறவா சகோதரர்கள் போல் தங்கள் வாழ்க்கையில் பத்து முதல் 15 ஆண்டு காலம் ஒன்றாகவே இணைந்து விளையாடுவார்கள்.
அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகள் இணைந்து விளையாடிய ஜோடி எது என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அளவில் இந்த பட்டியலில் சச்சினும் டிராவிட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்த ஜோடி இணைந்து 391 சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் டிராவிட் கங்குலி ஜோடியாகும்.
இந்த ஜோடி 369 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதேபோன்று சச்சின் கும்ப்ளே ஜோடி 367 சர்வதேச போட்டிகளில் இணைந்து ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் 360 சர்வதேச போட்டிகள் ஒன்றிணைந்து விளையாடி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் சச்சின் கங்குலி 341 போட்டிகளில் இணைந்து இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் சச்சின்- முகமது அசாருதீன் 292 போட்டிகளில் இணைந்து விளையாடி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் கோலி -தோனி 285 சர்வதேச போட்டிகளில் ஒன்றிணைந்து விளையாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு அதிக டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த போட்டியில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் இணைந்து விளையாட உள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்காக ஒன்றிணைந்து அதிக போட்டிகளில் விளையாடிய ஜோடி என்ற பெருமையை கோலியும் ரோகித்தும் படைக்க வாய்ப்பு இருக்கிறது.