காஷ்மீர் சாலையில் கிரிக்கெட் விளையாடும் சச்சின் டெண்டுல்கர்… லைக்ஸை குவிக்கும் வீடியோ…
காஷ்மீரில் சுற்றுலா மேற்கொண்டுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அங்கு சாலையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக விருப்பத்தை பெற்று வருகிறது.
காஷ்மீரில் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவர் விமானத்தில் பயணித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பூமியில் இருக்கும் சொர்க்கமான காஷ்மீரை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சச்சின் தனது ட்விட்டர் வீடியோ பதிவில் கூறியிருந்தார்.
Cricket & Kashmir: A MATCH in HEAVEN! pic.twitter.com/rAG9z5tkJV
— Sachin Tendulkar (@sachin_rt) February 22, 2024
இதைத் தொடர்ந்து கிரிக்கெட் பேட் களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நேரில் சென்ற சச்சின், அங்கு பேட் தயாரிப்பாளர்களிடம் கலந்துரையாடினார். சச்சினின் நகைச்சுவை மிகுந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து காஷ்மீரில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்று சச்சின் வழிபட்டார்.
இதைத் தொடர்ந்து காஷ்மீர் சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து, சச்சினும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
கிரிக்கெட் பந்தை அவர் அனைத்து திசைகளிலும் விரட்டி அடித்த காட்சி சமூக வலைதளங்களில் லைட்ஸ் கலை குவித்துள்ளது.