சோகம்..! பாலிவுட் பிரபலம் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பு..!நேற்று தங்கை.. இன்று அக்கா..!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்த டிவி நடிகை டோலி சோஹி (48) வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
நேற்றைய தினம் அவரது சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் காலமானார். இந்த சோகம் மறைவதற்குள் டோலி சோஹியும் உயிரிழந்திருப்பது பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டோலி மற்றும் அமந்தீப் சோஹி இருவரும் மும்பையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தங்கள் உடல்நலப் பிரச்சினைக்காக நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை டோலி சோஹி ‘கலாஷ்’, ‘ஹிட்லர் திதி’, ‘டெவோன் கே தேவ் மகாதேவ்’, ‘ஜனக்’ போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார்.
ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு சகோதரிகள் உயிரிழந்துள்ளது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பலரும் இவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்